'குஃப்ரி ஜமுனியா': ஊதா நிற உருளைக்கிழங்கு.. புதிய ரகத்தை அறிமுகம் செய்தது இந்திய வேளாண் ஆராய்ச்சி சபை!
இந்திய வேளாண் ஆராய்ச்சி சபையின் கீழ் இயங்கும் மத்திய உருளைக்கிழங்கு ஆராய்ச்சி நிறுவனம், ஆரோக்கியத்தை மையமாகக் கொண்டு 'குஃப்ரி ஜமுனியா’ என்னும் செறிவூட்டப்பட்ட புதிய ஊதா நிற உருளைக்கிழங்கு வகையை உருவாக்கியுள்ளது.
வழக்கமான உருளைக்கிழங்கைக் காட்டிலும் இந்தப் புதிய ஊதா நிற உருளைக்கிழங்கில் உடலுக்குத் தேவையான பல்வேறு சத்துக்கள் செறிவூட்டப்பட்டுள்ளன: வைட்டமின் சி இதில் 100 கிராமிற்கு 42.75 மில்லிகிராம் அளவுக்கு வைட்டமின் சி நிறைந்துள்ளது.
இயற்கையான நிறமியான 'அந்தோசயினின்கள்' அதிகளவில் காணப்படுவதால், இது வலிமையான ஆன்டி-ஆக்ஸிடன்ட் பண்புகளைக் கொண்டு உடலைப் பாதுகாக்க உதவுகிறது. மேலும், இதில் இரும்புச்சத்து மற்றும் அத்தியாவசிய வைட்டமின்களும் ஏராளமான அளவில் அடங்கியுள்ளன.
வட இந்தியப் பகுதிகளின் தட்பவெப்பச் சூழலில் சாகுபடி செய்வதற்கு மிகவும் ஏற்றதாக உருவாக்கப்பட்டுள்ள இந்த ஊதா நிற உருளைக்கிழங்கு ரகம், பொதுமக்களின் ஆரோக்கியத்திற்குத் தேவையான ஊட்டச்சத்துக்களைப் பூர்த்தி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
