நாளை குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா தொடக்கம்!

 
குலசேகரப்பட்டினம் தசரா நடனம் நாட்டுப்புற

நாளை தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன் பட்டினம் முத்தாரம்மன் உடனுறை ஞானமூர்த்தீஸ்வரர் கோவிலில் தசரா திருவிழா கொடி ஏற்றத்துடன் தொடங்குகிறது. இந்த வருடம் தசரா விழாவிற்கான கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு வருடமும் 11 நாட்கள் தொடர்ந்து நடைபெறும் தசரா திருவிழா நாளை கொடியேற்றுத்துடன் நாளை தொடங்கும் நிலையில் இன்று காலை காளி பூஜை நடைபெற்றது.  

குலசேகரப்பட்டினம் தசரா நடனம் நாட்டுப்புற

இன்று இரவு 9 மணிக்கு அம்மனுக்கு காப்பு கட்டப்படுகிறது. இதைத் தொடர்ந்து நாளை அதிகாலை 5 மணிக்கு யானை மீது கொடி பட்டம், வீதி உலா, காலை 6 மணிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறுகிறது.

குலசேகரப்பட்டினம் தசரா நடனம் நாட்டுப்புற

நாளை காலை 9:30 மணிக்கு கோயில் கொடி மரத்தில் கொடியேற்றப்படுகிறது . பின்னர் விரதம் இருந்து வரும் பக்தர்களுக்கு மஞ்சள் கயிற்றிலான காப்புகள் அணிவிக்கப்படுகிறது.  பல்வேறு வேடங்களை அணிந்து வீதி விதையாக அம்மனுக்கு காணிக்கை வசூலித்து பக்தர்கள் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார்.

From around the web