குப்வாராவில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு! 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

 
ஜம்மு காஷ்மீர்

 

ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில், எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்ற பயங்கரவாதிகளின் முயற்சியைப் பாதுகாப்புப் படையினர் முறியடித்துள்ளனர். உளவுத்துறை அளித்த தகவலின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட பகுதியில் பாதுகாப்புப் படையினர் தீவிர கண்காணிப்பு மற்றும் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

பயங்கரவாதிகள்

அப்போது பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடைபெற்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். தப்பிச் சென்றதாகக் கூறப்படும் மற்ற 2 பேரைத் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், ஊடுருவல் முயற்சிகளைத் தடுக்க அப்பகுதியில் பாதுகாப்புப் படையினரின் ரோந்துப் பணிகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன.