எல்.முருகன் ராஜினாமா.. மாநிலங்களவை இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!
மத்தியப் பிரதேச மாநிலத்தில் இருந்து மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட டாக்டர் எல்.முருகன் தனது பதவியை கடந்த அக்டோபர் 14-ம் தேதி ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, காலியாக உள்ள அந்த இடத்திற்கான இடைத்தேர்தலை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இவரது பதவிக்காலம் 2030-ஆம் ஆண்டு ஏப்ரல் 2-ஆம் தேதி வரை இருந்தது குறிப்பிடத்தக்கது.
வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள்: நவம்பர் 2 வேட்புமனு பரிசீலனை: நவம்பர் 3. வேட்புமனுக்களை வாபஸ் பெற கடைசி நாள்: நவம்பர் 5. வாக்குப்பதிவு நவம்பர் 12 (காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை). வாக்கு எண்ணிக்கை: நவம்பர் 12 (மாலை 5 மணிக்கு). தேர்தல் நடவடிக்கைகள் நிறைவு: நவம்பர் 16-க்குள்

தேர்தல் ஆணையச் செயலாளர் சுமன் குமார் தாஸ் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, இந்தத் தேர்தலில் வாக்காளர்கள் வாக்களிக்கத் தேர்தல் அதிகாரி வழங்கும் ஊதா நிற ஸ்கெட்ச் பேனாவை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும், வேறு எதையும் பயன்படுத்தக் கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலை உறுதி செய்வதற்காகத் தனிப் பார்வையாளர்களும் நியமிக்கப்பட உள்ளனர்.
