🏃 17,618 அடி உயரத்தில் லடாக் மாரத்தான்... 8,000-க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்பு!

 
Marathon

 

உலகின் மிக உயரமான மற்றும் சவாலான மாரத்தான்களில் ஒன்றான லடாக் மாரத்தானின் 13-வது தொடர் இன்று விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.இந்த போட்டியை லடாக் துணைநிலை ஆளுநர் வினய் குமார் சக்சேனா தொடங்கி வைத்தார்.

கடல் மட்டத்திலிருந்து சுமார் 11,500 அடி முதல் 17,618 அடி உயரம் வரையிலான பகுதிகளில் இந்த மாரத்தான் நடைபெறுகிறது. கடுமையான குளிர் மற்றும் உயரமான மலைப்பகுதி ஆகியவற்றுக்கு மத்தியில் வீரர்கள் ஓடுவது இந்த போட்டியின் முக்கிய சவாலாக உள்ளது.

புகழ்பெற்ற லடாக் மாரத்தான்: உலகம் முழுவதுமிருந்து 8,000 வீரர்கள் பங்கேற்பு!

இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் 8,000-க்கும் அதிகமான வீரர்கள் லடாக் மாரத்தானில் பங்கேற்றுள்ளனர்.இன்று நடைபெறும் இறுதிநாள் போட்டிகளில் முழு மாரத்தான், அரை மாரத்தான் உள்ளிட்ட முக்கியப் பிரிவுகளில் வீரர்கள் ஆர்வத்துடன் பங்கேற்று வருகின்றனர்.உயரமான மலைப்பகுதியில் நடைபெறும் இந்த போட்டி, வீரர்களின் உடல் தகுதி மற்றும் மன உறுதியை சோதிக்கும் முக்கிய விளையாட்டு நிகழ்வாக அமைந்துள்ளது.