10,600 அடி உயரத்தில் மலர்த் தோட்டம் - லடாக்கில் புதிய உலக சாதனை!
லடாக்கின் லே மாவட்டத்தில் கடல் மட்டத்திலிருந்து 10,600 அடி உயரத்தில் உலகின் மிக உயரமான இரட்டை மலர்த் தோட்டங்கள் அதிகாரப்பூர்வமாகத் திறக்கப்பட்டுள்ளன.
லடாக் யூனியன் பிரதேசத்தின் லே மாவட்டத்தில் உள்ள சோக்லம்சர் மற்றும் ஸ்டக்னா ஆகிய பகுதிகளில் சுமார் 40 ஏக்கர் பரப்பளவில் இந்த மலர்த் தோட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தத் தோட்டங்களில் மொத்தம் 25 லட்சத்துக்கும் மேற்பட்ட மலர்கள் வளர்க்கப்பட்டுள்ளன. இதில் குறிப்பாக 24 லட்சம் லில்லியம் மலர்களும், ஒரு லட்சம் கிளாடியோலஸ் மலர்களும் இடம்பெற்றுள்ளன.
இப்புதிய மலர்த் தோட்டங்களை லடாக் துணைநிலை ஆளுநர் வினய் குமார் சக்சேனா நேற்று நேரில் திறந்து வைத்தார். இப்பகுதியில் உள்ள உள்ளூர் விவசாயிகளுக்கு வணிக ரீதியான மலர்ச் சாகுபடி மூலம் புதிய மற்றும் நிலையான வருமான வாய்ப்புகளை உருவாக்கித் தருவதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
