ரூ.1 கோடியே 1 லட்சத்துக்கு ஏலம் போன லட்டு... ஐதராபாத்தில் களைக்கட்டிய விநாயகர் சதுர்த்தி திருவிழா!

 
விநாயகர் சதுர்த்தி சிலை லட்டு ஐதராபாத்

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு சாமிக்கு நைவேத்தியமாகப் படைக்கப்பட்ட லட்டு ஒன்று ரூ.1 கோடியே 1 லட்சத்திற்கு ஏலம் போனது பெரும் ஆச்சரியத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

ஐதராபாத் பந்தலகுடா ஜாகீர் பகுதியில் உள்ள கீர்த்தி ரிச்மண்ட் வில்லாஸ் குடியிருப்பு வளாகத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டுப் பிரம்மாண்ட விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது. அங்கு சாமிக்கு நைவேத்தியமாக 5 கிலோ எடையுள்ள லட்டு படைக்கப்பட்டது.

விநாயகர்

விழாவின் முக்கிய நிகழ்வாக நடைபெற்ற லட்டு ஏலத்தில், அந்த வளாகத்தைச் சேர்ந்த 'சக்திமான் குழு' என்ற குடியிருப்பாளர்கள் குழு போட்டோ போட்டுக்கொண்டு தொகையை உயர்த்தி, இறுதியாக ரூ.1.01 கோடி என்ற வரலாற்றுச் சாதனைத் தொகைக்கு அந்த லட்டை ஏலம் எடுத்தது.

இதே குடியிருப்பு வளாகத்தில் கடந்த ஆண்டு படைக்கப்பட்ட 10 கிலோ எடையுள்ள லட்டு, ரூ.2.32 கோடிக்கு ஏலம் போய் சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது. சங்காரெட்டி பகுதியில் நடைபெற்ற ஏலத்தில் ஒரு லட்டு ரூ.36 லட்சத்திற்கும், ஆந்திரப் பிரதேசத்தில் 630 கிலோ எடையுள்ள மற்றொரு லட்டு ரூ.25 லட்சத்திற்கும் ஏலம் எடுக்கப்பட்டன.

சிம்ம வாகனம் பிள்ளையார்பட்டி பிள்ளையார் விநாயகர் சதுர்த்தி

இந்த ஏலம் மூலம் கிடைக்கும் ஒட்டுமொத்தத் தொகையும் ஆர்.வி. தியா அறக்கட்டளை மூலம் ஏழை மாணவர்களின் கல்வி, மருத்துவ உதவி, ஆதரவற்றோர் நலம் மற்றும் விலங்குகள் நலப் பணிகளுக்காக முழுமையாகப் பயன்படுத்தப்படவுள்ளது.