ஏரியில் மூழ்கி 4 பெண்கள், 2 சிறுவர்கள் உட்பட 6 பேர் பலி... பெரும் சோகம்!

 
karnataka

 

கர்நாடக மாநிலம் விஜயபுரா அருகே உள்ள ஏரியில் மூழ்கி 4 பெண்கள் மற்றும் 2 சிறுவர்கள் உட்பட 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். தகவலறிந்து வந்த காவல்துறையினர் ஏரியில் இருந்து அழுகிய நிலையில் இருந்த அவர்களின் உடல்களை மீட்டுள்ளனர். பின்னர் அந்த உடல்களைப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

இவர்கள் அனைவரும் ஏரியில் குளிக்கச் சென்று நீரில் மூழ்கி இறந்தனரா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அல்லது இவர்கள் வேறு ஏதேனும் காரணத்தினால் தற்கொலை செய்துகொண்டனரா என்ற கோணத்திலும் போலிஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான கூடுதல் விவரங்களைச் சேகரிக்கும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.