இளைஞர்களுக்கு 1 லட்சம் பரிசு...தமிழ்நாடு அரசு முக்கிய அறிவிப்பு!

 
விஜய் விஜய்

தமிழகத்தில் உள்ள கிராமப்புற இளைஞர்களின் தனித்துவமான திறமைகளையும், அவர்களின் புதிய கண்டுபிடிப்புகளையும் ஊக்குவிக்கும் வகையில் தமிழ்நாடு அரசு ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன்படி, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறையின் கீழ் செயல்படும் அறிவியல் நகரம் சார்பில் ஆண்டுதோறும் வழங்கப்படும் ஊரக கண்டுபிடிப்பாளர் விருதுக்குத் தகுதியானவர்களிடம் இருந்து தற்பொழுது விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இந்தத் திட்டத்தின் கீழ் ஊரகப் புற மக்களின் அறிவுத் திறனை வெளிக்கொண்டு வரும் வகையில் இரண்டு சிறந்த கண்டுபிடிப்பாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். அவ்வாறு இறுதிப் பட்டியலுக்குத் தேர்வு செய்யப்படும் தகுதியான இரண்டு நபர்களுக்குத் தலா 1,00,000 ரூபாய் பரிசுத்தொகைக்கான காசோலை மற்றும் சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்படும் என்று அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விருதுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் இதற்கான விண்ணப்பப் படிவம் மற்றும் விதிமுறைகளை அறிவியல் நகரத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து எளிதாகப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் மூலமாக உரிய காலத்திற்குள் அனுப்பி வைக்க வேண்டும் என்றும், கூடுதல் விவரங்களை இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.