உத்தரப் பிரதேசத்தில் தனித்தனி மரங்களில் தூக்கில் தொங்கிய பெண், இளைஞர் உடல்கள்... பெரும் பரபரப்பு!
உத்தரப் பிரதேசத்தில் தனித்தனி மரங்களில் தூக்கில் தொங்கிய பெண், இளைஞர் உடல்கள்!
உத்தரப் பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரி மாவட்டத்தில், திருமணமான பெண் மற்றும் இளைஞர் ஆகிய இருவரின் உடல்கள் தனித்தனி மரங்களில் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் பதுவா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பெல்வாபுர்வா கிராமம் அருகே நடந்துள்ளது.
உயிரிழந்தவர்கள் பெஞ்சேபுர்வா கிராமத்தைச் சேர்ந்த ரமா (22), பச்சாசா கிராமத்தைச் சேர்ந்த ஜிதேந்திரா (18) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். ரமாவுக்கு சுமார் 18 மாதங்களுக்கு முன்பு திருமணமானதாகவும், அவர் நீண்ட காலமாகத் தனது தாய் வீட்டில் வசித்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இருவருக்கும் இடையே காதல் தொடர்பு இருந்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

ரமா ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வீட்டிலிருந்து வெளியே சென்றதாக அவரது தந்தை தெரிவித்துள்ளார். திங்கள்கிழமை காலை இருவரின் உடல்களும் வயல்வெளியில் உள்ள தனித்தனி மரங்களில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டன. இருவரும் ஏன் உயிரிழந்தனர் என்பது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
