ஐஸ்வர்யம் பெருக லட்சுமி குபேர பூஜை... தீபாவளிக்கு மிஸ் பண்ணீடாதீங்க... !!

 
லட்சுமி குபேர பூஜை

தீபாவளி அன்று இரவு குபேரனை தங்க, வெள்ளி நாணயங்களை வைத்து வழிபடுவர்.இதற்கு லட்சுமி குபேர பூஜை என்று பெயர். இதனை செய்வதால் வீட்டில் நிரந்தரமாக செல்வம் தங்கும். மகாலட்சுமி நித்ய வாசம் செய்வாள் என்பது காலம் காலமாக கடைப்பிடிக்கப்பட்டு வரும் நம்பிக்கை.

இந்த பூஜையை வீட்டில் செய்திட பூஜை மாடத்தில் லட்சுமி குபேர படத்தினை வைத்து இருபக்கமும் குத்து விளக்கு ஏற்றி வைக்க வேண்டும்.இதற்கு முன்பாக வாழை இலை விரித்து அதில் நவதானியங்களை பரப்பி வைக்க வேண்டும். நடுவில் சுத்தமான தண்ணீர் கலசம் வைக்க வேண்டும். அதில் ஓர் மட்டை தேங்காய் வைத்திட வேண்டும்.

ஐஸ்வர்யம் பெருக லட்சுமி குபேர பூஜை இப்படி செய்து பாருங்க!!

இந்த கலசத்தை மஞ்சள் குங்குமம் வைத்து பூக்களால் அலங்கரித்திட வேண்டும்.மஞ்சளில் பிள்ளையார் பிடித்து வைத்து பூஜையை ஆரம்பிக்க வேண்டும். விநாயகரை வணங்கி குலதெய்வத்தை மனதார பிரார்த்திக்க வேண்டும். பின் மகாலட்சுமியை வணங்கி போற்றி வழிபாடு சொல்ல வேண்டும். குபேர மந்திரங்களை சொல்ல வேண்டும். அல்லது “குபேராய நமஹ” “தனபதியே நமஹ” என 108 முறை சொல்லி தாமரை இதழ்களால் அர்ச்சிக்க வேண்டும்.

துர்கா லட்சுமி சரஸ்வதி
இனிப்புகள் மற்றும் பால் பாயாசம் நைவேத்தியமாக வைத்து பூஜையை முடிக்கலாம். பூஜையில் வைக்கப்படும் தட்சணை காசுகளை நமது பெட்டகங்களில் வைத்துக் கொள்ளலாம். இந்த பூஜையை செய்திட வீட்டில் மகாலட்சுமி வாசம் செய்வாள். குபேரன் சகல ஐஸ்வர்யத்தையும் வாரி வழங்குவார் . இந்த தீபஒளி திருநாளில் மகாலட்சுமியை வீட்டிற்கு வரவழைப்போம் . சகல சௌபாக்கியத்துடன் வாழ்வோம்.

From around the web