வாடகைக்குக் குடியிருந்தவரின் 10 வயது மகளை வன்கொடுமை செய்து வீடியோ எடுத்த வீட்டு உரிமையாளர்!
உத்தரப் பிரதேச மாநிலம் மதுரா மாவட்டத்தில், 10 வயது சிறுமியைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தி, அதனை வீடியோவாகப் பதிவு செய்த வீட்டு உரிமையாளரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 42 வயது நபர், உத்தரப் பிரதேசத்தின் மதுரா மாவட்டம் கோவர்தன் பகுதியில் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டின் ஒரு பகுதியை வாடகைக்கு விட்டுள்ளார். அங்குத் தங்கியிருந்த தம்பதியின் 10 வயது மகளை, வீட்டு உரிமையாளர் தொடர்ச்சியாகப் பாலியல் வன்கொடுமை செய்து, அதைத் தனது செல்போனிலும் பதிவு செய்துள்ளார்.

இக்கொடூரம் குறித்துப் பாதிக்கப்பட்ட சிறுமி தனது தாயாரிடம் தெரிவித்துள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த தாய் உடனடியாகக் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். சிறுமியின் தாயார் அளித்த புகாரின் அடிப்படையில், காவல்துறையினர் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு வீட்டு உரிமையாளர் மீது போக்சோ உள்ளிட்ட கடுமையான சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து அவரைக் கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
