பெரும் அதிர்ச்சி... கேரளாவில் மீண்டும் நிலச்சரிவு... வாகனங்கள் செல்லாததால் அசம்பாவிதம் தவிர்ப்பு!

 
நிலச்சரிவு
 

இன்று காலை கேரளாவில் மீண்டும் நிலச்சரிவு ஏற்பட்டது பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.கேரளா மாநிலத்தின் மூனாறு அருகே உள்ள கேப் ரோடு பகுதியில் இன்று காலை மீண்டும் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவு காரணமாக பெரிய பாறைகள் உருண்டு விழுந்ததால் அந்த பகுதி முழுவதும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

  நிலச்சரிவு

நல்ல நேரமாக, பாறைகள் உருண்டு விழுந்த போது அந்த பகுதியில் வாகனங்கள் எதுவும் செல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.கடந்த 30ம் தேதி கேரளாவின் வயநாடு பகுதியில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், இன்னும் முழுமையாக வயநாடு பகுதிகளில் மீட்பு பணிகள் முடிவடையவில்லை. அந்த அதிர்ச்சியில் இருந்து மக்கள் இன்னும் மீளாத நிலையில், கேரளாவில் அடுத்து நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா