நிலச்சரிவு எதிரொலி... களையிழந்த ஓணம் திருவிழா... தோவாளை சந்தையில் 150 டன் பூக்கள் தேக்கம்... கதறும் வியாபாரிகள்!

 
மலர் பூ மார்க்கெட் சந்தை
கேரள மாநிலம் வயநாடு நிலச்சரிவு எதிரொலியால் இந்த வருடம் கேரளத்தில் ஓணம் பண்டிகை பெரிய அளவில் கொண்டாடுவதை மக்கள் தவிர்த்துள்ளனர். ஆரம்பரமாக திருவிழாவைப் போல கொண்டாடப்படும் திருவோணம் பண்டிகை இந்த வருடம் கேரளத்தில் களையிழந்துள்ளது. ஒவ்வொரு வருடமும் இப்படியான ஓணம் பண்டிகை காலங்களில் இந்த 10 நாட்களிலுமே கேரள  எல்லையில் இருக்கும் தமிழக மாவட்டங்களான கன்னியாகுமரி, திருநெல்வேலி, நாகர்கோவில் போன்ற பகுதிகளிலும் தமிழர்களும் ஓணம் கொண்டாட்டத்தில் ஈடுபடுவார்கள். குமரி மாவட்டத்தில் உள்ள தோவாளை பூ சந்தையில் ஓணம் பண்டிகையையொட்டி பூக்கள் விற்பனை இந்த 10 நாட்களிலுமே அமோகமாக நடைபெறும்.

பூக்கள்

இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாகவே ஓணம் பண்டிகையின் போது கேரள மாநிலத்தில் நிலச்சரிவு, கொரோனா உள்ளிட்டவை ஏற்பட்டதால் ஓணம் சமயங்களில் தோவாளை மார்க்கெட் களையிழந்து காணப்பட்டது. இந்நிலையில், இந்த வருடமும் தோவாளை மலர் சந்தையில் சுமார் 150 டன் வரையிலான பூக்கள் விற்பனையாகாமல் தேங்கியது. கேரள நிலச்சரிவு பாதிப்பு காரணமாக ஓணம் பண்டிகையையொட்டி இந்த வருடம் பூக்களை வாங்க கேரள வியாபாரிகள் வழக்கமான அளவு தோவாளை சந்தைக்கு வரவில்லை என்பதால் பூக்கள் விற்பனை கணிசமாக குறைந்தது. 

ஓணம்

நேற்று சந்தைக்கு 300 டன் பூக்கள் கொண்டு வரப்பட்டன. ஆனால் நேற்று கேரளாவில் இருந்து வியாபாரிகள், பொதுமக்கள் வருகை குறைந்தது காரணமாக காலை முதலே வியாபாரம் சோர்ந்து களையிழந்தே காணப்பட்டது. அதிகாலை தொடங்கிய சந்தையில் சுமார் 150 டன் பூக்கள் மட்டுமே விற்பனையானது. 150 டன் பூக்கள் நேற்று இரவு வரையில் விற்பனையாகாமல் தேக்கம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. 

ஆவணி மாத சிறப்புக்கள் , வழிபாடுகள், பண்டிகைகள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா