BREAKING... அதிகாலையில் அதிர்ச்சி... மும்பையில் திடீர் நிலச்சரிவில் சிக்கி 2 பேர் பலி... பலர் மாயம்!

 
நிலநடுக்கம்

மும்பை குர்லா பகுதியில் இன்று அதிகாலை ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 4 முதல் 5 பேர் வரை இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. குர்லா அருகே உள்ள சிராக் நகர் பகுதியில் கவுசியா சாவ்ல் குடியிருப்புப் பகுதியில் அதிகாலை 3.48 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பும் சோகமும் ஏற்பட்டுள்ளது.

மலையடிவாரத்தின் ஒரு பகுதி திடீரென சரிந்து விழுந்ததில், அதன் மண் மற்றும் இடிபாடுகள் அருகில் இருந்த 2 முதல் 3 வீடுகளின் மீது விழுந்துள்ளன. இதில் பலர் இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்டதை அடுத்து தகவல் அறிந்த மும்பை தீயணைப்புப் படையினர் விரைந்து சென்றுள்ளனர். போலீசார் மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படையினருடன் இணைந்து மீட்புப் பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.

🚨Two people have died, while at least six others are feared trapped under the debris after a landslide in Mumbai's Kurla area in wee hours of Wednesday following heavy rain, officials said.

இந்த நிலச்சரிவு விபத்தில் உயிரிழந்த 2 பேரின் உடல்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. மேலும் காயமடைந்த 2 பேர் மீட்கப்பட்டு உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருவது குறிப்பிடத்தக்கது ஆகும்.