திமுக மொழிப்போர் தளபதி எல்.கணேசன் மறைவு… !

 
ganesan

திமுகவின் மூத்த முன்னோடியும் ‘மொழிப்போர் தளபதி’ என அழைக்கப்பட்டவருமான எல்.கணேசன் (92) வயது மூப்பு காரணமாக தஞ்சாவூரில் காலமானார். அவரது மறைவு திமுக தொண்டர்கள் மற்றும் அரசியல் வட்டாரத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நீண்ட காலமாக திராவிட இயக்கத்திற்காக உழைத்தவர் என அனைவராலும் மதிக்கப்பட்டவர்.

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள கண்ணந்தங்குடி கீழையூர் கிராமத்தில் 24-04-1934ல் பிறந்த எல்.கணேசன், அரசியலில் முக்கிய இடத்தைப் பெற்றார். ஒரத்தநாடு சட்டமன்றத் தொகுதியிலிருந்து 1971, 1989 ஆகிய ஆண்டுகளில் இருமுறை எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் எம்.எல்.சி., மாநிலங்களவை எம்.பி. உள்ளிட்ட பதவிகளையும் வகித்தார்.

1989ஆம் ஆண்டு முதல்வரின் பேரவை செயலாளராகவும் பணியாற்றினார். மொழி உரிமை மற்றும் சமூக நீதி போராட்டங்களில் முன்நின்று செயல்பட்டவர். அவரது மறைவு தமிழக அரசியலில் ஈடுகட்ட முடியாத இழப்பாக பார்க்கப்படுகிறது.