தமிழ்நாட்டில் மிகப்பெரிய பேட்டரி ஆலை.. ரூ.2000 கோடி செலவில் அமையும் LOHUM நிறுவனம்!

 
LOHUM நிறுவனம்

கிரேட்டர் நொய்டாவை தலைமையிடமாகக் கொண்ட LOHUM நிறுவனம், மறுசுழற்சி, மறுபயன்பாடு மற்றும் குறைந்த கார்பன் சுத்திகரிப்பு மூலம் நிலையான பேட்டரி மூலப்பொருட்களை உற்பத்தி செய்கிறது. இந்நிறுவனம், தமிழகத்தில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கேத்தோடு செயலில் உள்ள பொருட்களை தயாரிக்க, 6 ஆண்டுகளில் ரூ.2000 கோடி முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது.

இதற்காக கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் பகுதியில் 65 ஏக்கர் நிலத்தை நிறுவனம் கையகப்படுத்தியுள்ளது. மேலும் நிறுவனம் தனது உற்பத்தியை 18 மாதங்களில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதல் இரண்டு ஆண்டுகளில் ரூ.400 கோடி முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளதாக LOHUM நிறுவன மேம்பாட்டுத் தலைவர் சச்சின் மகேஸ்வரி தெரிவித்தார். மேலும், இங்கு உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் பேட்டரிகள் தயாரிக்கும் ஓலா, எக்ஸ்சைட், டிவிஎஸ், அமரராஜா ஆகிய நிறுவனங்களுக்கு வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.

நொய்டாவில் 7 இடங்களிலும், UAE, குஜராத் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தலா ஒரு இடத்திலும் இந்த NOHUM நிறுவனம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆலை 1,000 டன் கோபால்ட், நிக்கல் மற்றும் லித்தியம் ஆகியவற்றை மறுசுழற்சி செய்து ஆண்டுக்கு 20 ஆயிரம் டன் பேட்டரிகளை உற்பத்தி செய்யும் திறன் கொண்டதாக இருக்கும்.

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா