புது புது அப்டேட்களுடன் கலக்கும் வாட்ஸ் அப்... பயனர்கள் உற்சாகம்... !

 
வாட்ஸ் அப்
வாட்ஸ் அப்பில் புளூடூத்தை பயன்படுத்தி அருகில் இருப்பவர்களுடன் 2 ஜிபி வரையிலான கோப்புக்களை ஷேர் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது . இந்த அம்சம் தற்போது சோதனை கட்டத்தில் இருந்து வருவதாகவும் விரைவில் நடைமுறைக்கு வரும் எனவும்மெட்டா நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஒன்றை வெளீயிட்டுள்ளது. வாட்ஸ் அப்பின் மெட்டா நிறுவனம் அடுத்தடுத்த அதிரடி அறிவிப்பால் வாடிக்கையாளர்களை கவனம் ஈர்த்து வருகிறது. 

உலகம் முழுவதும் அதிகமாக பதிவிறக்கம் செய்யப்படுகிற செயலிகளுள் வாட்ஸ்- அப் பெரும் பங்கு வகிக்கிறது. இன்றைய இளைஞர்களிடையே இன்ஸ்டா, ட்விட்டர் பிரபலத்தை விட வாட்ஸ்-அப் செயலியின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு, வாட்ஸ்-அப் செயலி பயன்படுத்த கட்டணம் விதிக்கப்படலாம் என்கிற செய்தி வெளியாகி அதிர்ச்சியளித்த நிலையில், தற்போது, வாட்ஸ்-அப் செயலியில் அடுத்த அப்டேட் குறித்த தகவல் வெளியாகி, பயனர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

உங்களுக்கு பிடித்த நிறத்தில் இனி வாட்ஸ்-அப் செயலியில் நிறத்தை மாற்றலாம். இதற்காக பயனர்களுக்கு ஏற்றாற் போல் 5 நிறங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. 

வாட்ஸ் அப்

அவ்வப்போது புது புது மாற்றங்கள் வாட்ஸ்-அப் செயலியில் அறிமுகப்படுத்தப்பட்டுக் கொண்டிருந்தாலும், இன்னும் புதுமையான அறிமுகங்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. சரி வாட்ஸ்-அப் ல எப்படி உங்களுக்குப் பிடித்த நிறத்தை மாற்றுவது என தெரிந்து கொள்லலாம் வாங்க. 

வாட்ஸ் அப் நிறத்தை மாற்ற , முதலில் உங்கள் செல்போனில் வாட்ஸ்-அப் செயலியைத் திறக்கவும். அதன் பின்னர் வாட்ஸ்-அப் செயலியின் வலது பக்கம் மேல் மூலையில் உள்ள மூன்று புள்ளிகளைக் க்ளிக் செய்யவும். அதன் பிறகு வாட்ஸ்-அப் செட்டிங்ஸ் என்பதைத்  தேர்ந்தெடுக்கவும்.

வாட்ஸ் அப்

இப்போது செட்டிங்க்ஸ் பிரிவில், "சாட்கள்" என்பதைத் தேர்ந்தெடுக்கவும். சாட்கள் பிரிவு ஓபன் ஆனதும், அதில் "தீம்" என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

இப்போது வாட்ஸ்-அப் தீம்களில், சிஸ்டம் டீ ஃபால்ட் , லைட் மற்றும் டார்க் என்கிற வகைகள் இருக்கும். அதன்பின்னர் பச்சை, நீலம், வெள்ளை, பிங்க், ஊதா என ஐந்து நிறங்களில் ஏதாவது ஒன்றை தேர்வு செய்து கொள்ளலாம். என்ன அப்டேட் செய்ய ரெடியா?

From around the web