"ரஜினி சொன்னபடி நதிநீர் இணைப்புக்கு ₹1 கோடி தருவார்" - லதா ரஜினிகாந்த் உறுதி!

 
லதா ரஜினிகாந்த்

காவிரி நதிகள் இணைப்புத் திட்டத்தை அரசாங்கம் எப்போது தொடங்கினாலும், நடிகர் ரஜினிகாந்த் தான் அளித்த வாக்குறுதியின்படி ₹1 கோடி நிதியை வழங்குவார் என அவரது மனைவி லதா ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

சென்னையில் ஸ்ரீதயா அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 'மக்கள் மேடை' என்ற புதிய இணையதளத்தை லதா ரஜினிகாந்த் அறிமுகப்படுத்தி வைத்தார். பொதுமக்களின் முக்கியப் பிரச்சனைகளைக் கண்டறிந்து, அவற்றை அரசின் கவனத்திற்கு எடுத்துச் செல்வதே இந்த 'மக்கள் மேடை' இயக்கத்தின் முதன்மை நோக்கமாகும்.

லதா

காவிரி நதிகள் இணைப்புத் திட்டம் குறித்துச் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த லதா ரஜினிகாந்த், "அரசாங்கம் நதிகள் இணைப்புத் திட்டத்தை எந்த நிமிடத்தில் தொடங்கினாலும், ரஜினிகாந்த் தான் முன்பே அறிவித்தபடி ₹1 கோடி நிதியை நிச்சயமாக வழங்குவார்" என்றார்.

விவசாயிகள் நலமும் நாட்டுப்பற்றும் மிகவும் அவசியமானது எனக் குறிப்பிட்ட அவர், தமது சமூகப் பணிகளுக்கு ரஜினிகாந்தின் முழு ஆதரவும், அவரது ஆசீர்வாதமும் இருப்பதாகவும் தெரிவித்தார்.