நெல்லையில் பதற்றம்... வழக்கறிஞர் வெட்டி படுகொலை!

 
சரவணராஜ்
 

திருநெல்வேலி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள புளியங்குளம் பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர் சரவணன்ராஜ். இவர் நெல்லை  ஆரோக்கியநாதபுரத்தைச் சேர்ந்த ஜான் என்பவரின் இடப் பிரச்சனை சம்பந்தமான வழக்கில் ஆஜராகி நடத்தி வந்தார். 

சரவணராஜ்


இந்நிலையில் வழக்கிற்கு சம்பந்தப்பட்ட நிலத்தில் பொக்கலைன் இயந்திரம் மூலம் சமன் செய்து கொண்டிருந்த வழக்கறிஞர் சரவணன் ராஜனை நிலப்பிரச்சனை சம்பந்தமான மற்றொரு பிரிவினர் அரிவாளால் சரமாரியாக வெட்டினர். இதில் ரத்தவெள்ளத்தில் படுகாயம் அடைந்த சரவணனை அங்கிருந்தவர்கள் மீட்டு, பாளையங்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

ஆம்புலன்ஸ்

எனினும் சிகிச்சைப் பலனளிக்காமல் வழக்கறிஞர் சரவணன் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவலறிந்த பெருமாள்புரம் போலீசார், வழக்கறிஞர் சரவணனின் உடலைப் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விட்டு, இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

 பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!