30,000 ஊழியர்கள் பணிநீக்கம் .. ஆரக்கிள் அதிரடி! AI முதலீட்டிற்காக எடுக்கப்பட்ட விபரீத முடிவு!

 
ஆரக்கிள் ஆரக்கிள்

சர்வதேசப் பொருளாதாரச் சூழல் மற்றும் தொழில்நுட்ப மாற்றங்களுக்கு ஏற்பத் தங்களை மாற்றிக்கொள்ளும் முயற்சியில், ஆரக்கிள் நிறுவனம் தனது வரலாற்றிலேயே மிகப்பெரிய அளவிலான பணிநீக்க நடவடிக்கையை இன்று மேற்கொண்டுள்ளது.

பணி நீக்கம் வேலை ஊழியர்கள்

உலகம் முழுவதும் சுமார் 30,000 ஊழியர்கள் நீக்கப்பட்டுள்ள நிலையில், இந்தியாவில் மட்டும் சுமார் 12,000 ஊழியர்கள் வேலையிழந்துள்ளனர். இன்று அதிகாலை 6 மணிக்கே ஊழியர்களுக்கு அனுப்பப்பட்ட அதிகாரப்பூர்வ மின்னஞ்சலில், "நிறுவனத்தின் கட்டமைப்பு மாற்றங்கள் காரணமாக உங்கள் பணி இன்றுடன் முடிவுக்கு வருகிறது" எனத் தெரிவிக்கப்பட்டது. இன்ஜினியரிங், டேட்டா சென்டர் ஆப்பரேஷன்ஸ் மற்றும் கிளவுட் அப்ளிகேஷன்ஸ் பிரிவுகளில் பணியாற்றியவர்கள் இதில் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஆரக்கிள் நிறுவனம் OpenAI உடன் இணைந்து ஏஐ தரவு மையங்களை உருவாக்க சுமார் $156 பில்லியன் மதிப்பிலான மெகா திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இதற்கான நிதியைத் திரட்டப் பணியாளர்களின் எண்ணிக்கையைச் சுருக்கியுள்ளது. சுமார் $108 பில்லியன் கடன் சுமையில் உள்ள அந்நிறுவனம், இந்த பணிநீக்கத்தின் மூலம் ஆண்டுக்கு $8 - $10 பில்லியன் வரை சேமிக்கத் திட்டமிட்டுள்ளது. தற்போது நடந்துள்ள இந்த அதிரடி நடவடிக்கையைத் தொடர்ந்து, அடுத்த ஒரு மாதத்திற்குள் மற்றொரு கட்டப் பணிநீக்கம் இருக்கக்கூடும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வேலையிழப்பு

பாதிக்கப்பட்ட இந்திய ஊழியர்களுக்கு 15 நாட்களுக்கான அடிப்படைச் சம்பளம் (ஒவ்வொரு ஆண்டு பணிக்கும்), ஒரு மாத நோட்டீஸ் பீரியட் சம்பளம், கூடுதலாக 'டாப்-அப்' தொகையாக இரண்டு மாதச் சம்பளம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.