தலைவர்கள் இரங்கல்... திமுக முன்னாள் அமைச்சர் மனோ தங்கராஜின் சகோதரர் காலமானார்!

 
மனோ தங்கராஜ் சகோதரர் டி.ஜெயன் தங்கராஜ்

திமுகவின் முன்னாள் அமைச்சரும், கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவருமான மனோ தங்கராஜின் சகோதரர் டி.ஜெயன் தங்கராஜ் உடல்நலக்குறைவு காரணமாக பெங்களூருவில் நேற்று காலமானார். அவருக்கு வயது 59.

மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வந்த ஜெயன் தங்கராஜ், பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தார். அங்குச் சிகிச்சை பலனின்றி நேற்று மாலை அவர் காலமானார். 

மனோ தங்கராஜ்

கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் பாலூரைச் சேர்ந்தவரான ஜெயன் தங்கராஜின் மறைவு அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மறைந்த ஜெயன் தங்கராஜின் உடலுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள், உள்ளூர் பிரமுகர்கள், பொதுமக்கள் பலரும் அஞ்சலி செலுத்தி தங்களது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்து வருகின்றனர்.