ஏசி கேஸில் ஏற்பட்ட கசிவு.. அடுத்தடுத்து மயக்கமடைந்த 30-க்கும் மேற்பட்ட ஊழியர்கள்.. மருத்துவமனையில் தீவிர சிகிச்சை!

 
சூலூர் வாயுக்கசிவு

கோவையில் உள்ள ஒரு உணவு உற்பத்தி நிறுவனத்தில், நச்சு வாயு காரணமாக மூச்சுத் திணறல் ஏற்பட்டு 30க்கும் மேற்பட்ட ஊழியர்கள் தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வாயுக்கசிவு

கோவை அருகே சூலூர் பகுதியில், நட்சத்திர உணவகங்களுக்காக பேக்கரி உணவு உற்பத்தி நிறுவனம் இயங்கி வருகிறது. இங்கு வெளி மாநிலங்களைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிகின்றனர். இந்நிலையில், தொழிலாளர்கள் பணியில் இருந்தபோது, ​​ஏசியில் இருந்து கசிவு ஏற்பட்டு, அறை முழுவதும் எரிவாயு பரவியது.

இதனால் தலைச்சுற்றல், மயக்கம் ஏற்பட்டு, பல ஊழியர்கள் அவதிப்பட்டனர். இதையடுத்து, பாதிக்கப்பட்ட 30க்கும் மேற்பட்ட ஊழியர்கள் 10 ஆம்புலன்ஸ்களில் தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இச்சம்பவம் குறித்து சூலூர் காவல் நிலையம் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க! 

From around the web