தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி அக்.1-ல் இடதுசாரிகள் கண்டன ஆர்ப்பாட்டம்!

 
கம்யூனிஸ்ட்

இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரைப் பதவி நீக்கம் செய்யக் கோரி, வரும் அக்டோபர் 1-ஆம் தேதி அன்று தமிழகம் முழுவதும் கம்யூனிஸ்ட் கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

பிற தேர்தல் ஆணையர்களின் ஆட்சேபனைகளையும் மீறி, பாஜக ஆதரவுடன் தன்னிச்சையாகச் செயல்பட்டு சுமார் 13 கோடி வாக்காளர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கியுள்ளதாக இடதுசாரிக் கட்சிகள் தரப்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வ்ஃப்ட்ச்ஃப்

தேர்தல் ஆணையத்தின் இந்தச் சர்ச்சைக்குரிய நடவடிக்கைகளுக்குப் பிரதமர் மோடியும், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் முழுப் பொறுப்பேற்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்தியத் தேர்தல் நடைமுறைகளின் நம்பகத்தன்மையைக் காக்கும் வகையில் உச்ச நீதிமன்றம் உடனடியாக இதில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.