லெஜண்ட்’ அண்ணாச்சியின் ஹீரோயின் பிறந்தநாளுக்கு தங்கத்தில் ரூ.3 கோடிக்கு பிறந்த நாள் கேக்... வைரலாகும் வீடியோ!

 
cake

பிரம்மாண்டமாய்... மிக பிரம்மாண்டமாய்... உங்கள் சரவணா ஸ்டோர்ஸ் என்பது நம்ம 'லெஜண்ட்’ அண்ணாச்சிக்கு மட்டுமே பொருந்தகூடியது கிடையாது. அவருடைய படத்தின் ஹீரோயினுக்கும் பொருந்தும் போல. 'லெஜண்ட்’ படத்தில் அண்ணாச்சிக்கு ஜோடி போட்ட நடிகை ஊர்வசி ரவ்தேலா, தன்னுடைய பிறந்த நாளுக்காக ரூ.3 கோடி மதிப்பிலான தங்கக் கேக் வெட்டி பிறந்தநாள் விழாவைக் கொண்டாடிய வீடியோ  தான் வைரலாகி வருகிறது. 


ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கவும், தயாரிப்பாளர்கள், இயக்குநர்களுக்கு தனக்கு இன்னும் மவுசு இருக்கு என்பதை நிரூபிப்பதற்காகவும் அவ்வப்போது சர்ச்சைகளில் சிக்குவது, அரைகுறை ஆடைகளில் போட்டோஷூட் செய்து வைரலாக்குவது என்பது சமீபமாய் நடிகைகளின் பொழுதுபோக்கு யுக்தியாக இருக்கிறது. இந்நிலையில், ‘லெஜண்ட்’ பட நாயகி ஊர்வசி ரவ்தேலாவின்  பிறந்தநாள் கேக் வைரலாகி உள்ளது. 
நேற்று நடிகை ஊர்வசி ரவ்தேலா தன்னுடைய 30வது பிறந்தநாளை கொண்டாடினார். நடிகரும், பாடகருமான ஹனி சிங்குடன் சேர்ந்து ஊர்வசி ரவ்துலா நேற்று தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடினார். 

cake
பிறந்தநாள் விழாவில் அவர் வெட்டிய கேக் தான் ஹைலைட். ஊர்வசி தன்னுடைய பிறந்தநாளுக்கு 24 கேரட் தங்கத்தால் செய்யப்பட்ட கேக்கை  வெட்டி பிறந்தநாளைக் கொண்டாடினார். அந்த தங்கக் கேக்கின் விலை மட்டும் ரூ.3 கோடியாம். 
இந்தக் கேக்கை பாடகர் ஹனி சிங், நடிகை ஊர்வசி ரவ்துலாவுக்கு தன்னுடைய பிறந்தநாள் பரிசாகக் கொடுத்திருக்கிறாராம். இந்தப் புகைப்படங்களையும் வீடியோக்களையும் ஊர்வசி தன்னுடைய சமூக வலைதளப்பக்கத்தில் பகிர்ந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.
 மார்ச் 12ம் தேதி ரிலீஸாக இருக்கும் ‘லவ் டோஸ்2’ படத்தின் படப்பிடிப்பு தளத்தில் நேற்று தனது பிறந்தநாளைக் கொண்டாடியிருக்கிறார் நடிகை ஊர்வசி ரவ்தேலா.

From around the web