பிரபல 'கல்கி பகவான்' விஜயகுமார் காலமானார் - பக்தர்கள் அதிர்ச்சி!
Sep 30, 2026, 07:43 IST
பிரபல ஆன்மீகத் தலைவரும் 'கல்கி பகவான்' என்று பக்தர்களால் அழைக்கப்பட்டு வந்த விஜயகுமார் நாயுடு (77) உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்.
கடந்த 10 நாட்களாகச் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் தீவிரச் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று (செப்டம்பர் 29) பிற்பகல் 3 மணியளவில் அவரது உயிர் பிரிந்ததாக அறக்கட்டளைப் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.
மறைந்த கல்கி பகவானின் உடல், இன்று பிற்பகல் முதல் ஆந்திர மாநிலம் திருப்பதியில் உள்ள ஏகம் ஆலயத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
