லெமன் சாதத்தில் உயிருடன் நெளிந்த பூரான்.. உணவக உரிமையாளர் அலட்சியம்!
தமிழகத்தில் பல உணவகங்களில், உணவு பண்டங்கள் விஷமாகி வருகிறது. வாடிக்கையாளர்களின் உடல் நலம் குறித்தோ, உயிர் குறித்தோ எந்தவிதமான அக்கறையும் இல்லாமல் விஷமான உணவுகளைப் பரிமாறி வரும் போக்கு அதிகரித்து வருகிறது. சில உடனடியாக உயிரை எடுக்கின்றன. சில உணவு வகைகள் கொஞ்சம் கொஞ்சமாக உயிரைப் பதம் பார்க்கின்றன. பட்டாபிராம் பகுதியைச் சேர்ந்த லஷ்மி மற்றும் ஆவடியைச் சேர்ந்த கோமதி ஆகியோர் ஆவடியில் உள்ள வங்கி ஒன்றில் பணிபுரிந்து வருகின்றனர். இருவரும் நேற்று ஆவடி செக்போஸ்ட் பகுதியில் உள்ள ஒரு உணவகத்திற்கு மதிய உணவு சாப்பிட சென்றனர். அங்கு உணவு மற்றும் எலுமிச்சை சாதம் பார்சல் வாங்கினர். பிறகு அலுவலகம் சென்று தட்டில் வைத்து சாப்பிட வைத்தனர்.

அப்போது லெமன் சாதத்தில் உயிருடன் பூரான் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த அவர்கள் உடனடியாக உணவை எடுத்துக்கொண்டு சம்பந்தப்பட்ட உணவகத்திற்கு சென்றனர். இதற்கு உணவக உரிமையாளர்கள் உரிய பதில் அளிக்கவில்லை என கூறப்படுகிறது. மேலும் "உயிருடன் இருப்பது எப்படி உணவில் வந்திருக்கும்?" என அவர்கள் வாதிட்டனர். இதையடுத்து, உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளிடம், பெண்கள் புகார் அளித்தனர்.

இந்நிலையில் பூரன் உணவில் நெளியும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த காட்சிகளில் வாடிக்கையாளர் உணவை எடுத்துக்கொண்டு கடையில் தகராறு செய்வது பதிவாகியுள்ளது. மேலும் "பூரணுடன் சாதம் உண்பது எப்படி?" கடுமையாக வாக்குவாதம் செய்தனர். இதுகுறித்து ஓட்டல் நிர்வாகத்திடம் கேட்டபோது, “சாப்பாடு இப்படி இருக்காது என்றும் இது எங்களுக்கும் அதிர்ச்சி” என்றும் பதிலளித்தனர். ஆவடியில் உள்ள ஒரு பிரபலமான உணவகத்தில் இருந்து வாங்கிய உணவில் பூரான்களைக் கண்டுபிடித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!
