சோகம்... கட்டிலில் உறங்கிக் கொண்டிருந்த விவசாயியைத் தூக்கிச் சென்று சிறுத்தை அடித்துக் கொலை!

 
சிறுத்தை

 

உத்தரப் பிரதேசத்தில் தனது வீட்டின் வெளியே கட்டிலில் உறங்கிக் கொண்டிருந்த விவசாயியை நள்ளிரவில் வந்த சிறுத்தை ஒன்று திடீரென தூக்கி சென்றுள்ளது. அவரது கழுத்தைக் கடித்து அருகில் இருந்த கரும்பு தோட்டத்திற்கு இழுத்துச் சென்று கொன்ற அந்த சிறுத்தையைக் கூண்டுகள் வைத்துப் பிடிக்க வனத்துறையினர் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பீதியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. கிராமப் பகுதிகளில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வனவிலங்குகளின் நடமாட்டம் பொதுமக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

Leopard kills farmer in Lakhimpur, villagers refuse post-mortem till capture

விவசாயி நள்ளிரவில் சிறுத்தையால் அடித்துக் கொல்லப்பட்டதை அறிந்த குடும்பத்தினரும் பொதுமக்களும் கதறி அழுத காட்சி அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது. தகவல் கிடைத்தவுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் அப்பகுதியில் தீவிரத் தேடுதல் வேட்டையை நடத்தி வருகின்றனர். சிறுத்தையின் நடமாட்டத்தைக் கண்காணிக்கவும் அதைப் பாதுகாப்பாகப் பிடிக்கவும் அப்பகுதியில் பல இடங்களில் இரும்புக்கூண்டுகள் வைக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் யாரும் இரவு நேரங்களில் வீட்டைவிட்டு வெளியே தனியாக வரவேண்டாம் என வனத்துறையினர் கடுமையான எச்சரிக்கைகளை விடுத்துள்ளனர்.

தொடர் சம்பவங்களால் அச்சமடைந்துள்ள விவசாயக் குடும்பங்களுக்கு உரிய நிவாரணம் வழங்கப்பட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வனப்பகுதிகளில் இருந்து விலங்குகள் ஊருக்குள் நுழைவதைத் தடுக்க நிரந்தரத் தடுப்புவேலிகளை அமைக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர். சிறுத்தையைப் பிடிக்கும் வரை அப்பகுதியில் உள்ள பாதுகாப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து கண்காணித்து வருகிறது