"ஸ்டாலின் வெல்லட்டும்.. நாடு சுடுகாடாகட்டும்!" - காரைக்குடியில் கொதித்தெழுந்த சீமான்!

 
சீமான் சீமான்

தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், காரைக்குடியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராகப் போட்டியிடும் சீமான், தனது பரப்புரையில் திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகளைக் கடுமையாகச் சாடிப் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காரைக்குடியில் வாக்காளர்களிடையே பேசிய சீமான், தான் அரசியலுக்கு வந்த தொடக்ககால நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார்.

இன்று சீமான் பரப்புரை மேற்கொள்ளும் இடங்கள்!

"இதே மண்ணில் ஐயா சிதம்பரத்திற்காக 'கை' சின்னத்தில் வாக்கு கேட்டு, 'உதயசூரியன்' போட்ட வீட்டு வாசலில் 'கை' சின்னத்தை வரைந்து பஞ்சாயத்தில் நிறுத்தப்பட்டவன் நான். அன்று கை சின்னத்திற்காக உழைத்த அதே நான் தான், இன்று அந்தச் சின்னத்தையே ஒழிக்க வேண்டும் என்று நிற்கிறேன்."

திமுக அரசின் செயல்பாடுகளை விமர்சித்துப் பேசிய அவர், ஒருகட்டத்தில் ஆவேசமாக, "ஸ்டாலின் வெல்லட்டும்.. நாடு சுடுகாடாகட்டும்" எனச் சாபமிடும் தொனியில் பேசினார். திமுகவின் ஆட்சி தொடர்ந்தால் தமிழகம் சுடுகாடாக மாறிவிடும் என்ற அர்த்தத்தில் அவர் முன்வைத்த இந்த விமர்சனம், அங்கிருந்தவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

சீமான்

முன்னதாக, காரைக்குடி அழகப்பர் நடையாளர் சங்க உறுப்பினர்களைச் சந்தித்த சீமான், அவர்களுடன் நடைப்பயிற்சி மேற்கொண்டு தனது 'மைக்' சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். தற்போதைய அரசியல் சூழலில் மாற்றத்தை ஏற்படுத்தத் தனக்கு ஒரு வாய்ப்பு வழங்குமாறு அவர் மக்களிடம் கேட்டுக்கொண்டார்.