அதிமுக ஆட்சியை மீண்டும் மலரச் செய்வோம்... எடப்பாடி பழனிசாமி உருக்கமான கடிதம்!

 
எடப்பாடி இபிஎஸ் பொதுக்குழு

ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழாவைக் கொண்டாடும் வேளையில், "நமது இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் பிறந்தநாள், ஒவ்வொரு அதிமுக தொண்டனுக்கும் ஒரு புத்தாண்டு போன்றது. அவர் காட்டிய வழியில் மக்கள் பணியாற்றுவதே அவருக்கு நாம் செய்யும் உண்மையான மரியாதை" என்று எடப்பாடி பழனிசாமி உருக்கமாக குறிப்பிட்டுள்ளார்.

எடப்பாடி பழனிசாமி

கடந்த ஐந்தாண்டு கால திமுக ஆட்சியில் மக்கள் படும் துயரங்களையும், நிர்வாகச் சீர்கேடுகளையும் எடப்பாடி பழனிசாமி கடுமையாகச் சாடியுள்ளார். "மக்கள் விரோத ஆட்சியை அகற்ற வேண்டிய காலம் கனிந்துவிட்டது. வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக மாபெரும் வெற்றி பெற்று, மீண்டும் 'அம்மா ஆட்சி'யை அமைப்பதே நமது ஒரே லட்சியமாக இருக்க வேண்டும் என்று தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

எடப்பாடி

"குரூப்-குரூப்பாகப் பிரிந்து கிடக்காமல், அனைவரும் ஒற்றுமையுடன் களப்பணியாற்ற வேண்டும். மக்கள் மத்தியில் திமுகவின் பொய் வாக்குறுதிகளைத் தோலுரித்துக் காட்ட வேண்டும்" என்று தனது மடலில் வலியுறுத்தியுள்ளார். பிப்ரவரி 24 அன்று மாநிலம் முழுவதும் ஜெயலலிதாவின் சிலைக்கு மாலை அணிவித்தல், ஏழை எளியோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குதல் போன்ற பணிகளில் ஈடுபட வேண்டும் எனவும், இதுவே தேர்தலுக்கான வெற்றிக் களத்தின் தொடக்கமாக இருக்க வேண்டும் எனவும் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.