"வா சேர்ந்தே சாகலாம்" - திடீரென காதலனையும் இழுத்துக் கொண்டு 7-வது மாடியில் இருந்து குதித்த இளம்பெண் பலி - பெங்களூரில் பரபரப்பு!

 
ஜனனி பெங்களூர் குதித்து

பெங்களூருவில் காதலனுடன் ஏற்பட்ட தகராறில், விடுதியின் ஏழாவது மாடியில் இருந்து கீழே குதித்த மென்பொருள் பொறியாளர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூரு ஒயிட்ஃபீல்டு பகுதியில் உள்ள தனியார் விடுதியில் தங்கி, அங்குள்ள சொசைட்டி ஜெனரல் நிறுவனத்தில் மென்பொருள் பொறியாளராகப் பணிபுரிந்து வந்தவர் 23 வயது ஜனனி. புதுச்சேரியைச் சேர்ந்த இவரும், லாஜிஸ்டிக்ஸ் நிறுவனத்தில் பணியாற்றும் மணிச்சவேலு என்பவரும் காதலித்து வந்துள்ளனர். சம்பவத்தன்று காலையில் இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த ஜனனி கட்டிடத்தின் விளிம்பை நோக்கி நகர்ந்து கீழே குதிக்க முயன்றுள்ளார்.

மாடியில் இருந்து  மாடியிலிருந்து குதித்து

ஜனனி குதிக்க முயன்ற போது, அருகில் இருந்த காதலன் மணிச்சவேலுவின் சட்டையைப் பிடித்துக் கொண்டுதன்னோடு சேர்த்து இழுத்ததாகக் கூறப்படுகிறது. இதனால் இருவரும் எதிர்பாராதவிதமாக ஏழாவது மாடியில் இருந்து கீழே விழுந்துள்ளனர்.

இச்சம்பவத்தில் ஜனனி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயமடைந்த மணிச்சவேலு மீட்கப்பட்டு அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். காவல்துறையினர் நிகழ்விடத்திற்கு விரைந்து சென்று வழக்குப்பதிவு செய்து இது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.