“இன்னொரு கல்யாணம் பண்ணிக்கோங்க...” உருக்கமான கடிதம் எழுதி விட்டு, மகனுடன் மாடியிலிருந்து குதித்து இளம்பெண் தற்கொலை!
மகாராஷ்டிரா மாநிலம் புனே அருகே தனது 6 வயது மகனுடன் இளம்பெண் ஒருவர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
புனே மாநிலம், பிம்ப்ரி-சின்ச்வாட் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் 33 வயதான ஏக்தா பங்காட் தனது மகன் மாதவுடன் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை நடத்தினர்.
ஏக்தா நீண்டகாலமாக முதுகுத்தண்டு தொடர்பான உடல்நலப் பாதிப்பால் அவதிப்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் அவர் மன உளைச்சலில் இருந்தாரா என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
தற்கொலைக்கு முன்பாக தனது கணவருக்கு 8 பக்கங்கள் கொண்ட கடிதம் ஒன்றை எழுதி வைத்திருந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதில், தனது மறைவுக்குப் பிறகு கணவர் மறுமணம் செய்து கொண்டு வாழ்க்கையைத் தொடர வேண்டும் என்று குறிப்பிட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.

இந்தக் கடிதத்தின் உள்ளடக்கம் மற்றும் சம்பவத்தின் பின்னணி குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தாய், மகன் இருவரின் உயிரிழப்பு அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
