உத்தரப் பிரதேசத்தில் இடி,மின்னலுக்கு 89 பேர் பலி - நூற்றுக்கணக்கான கால்நடைகள் உயிரிழப்பு!

 
மக்களே உஷார்..! புதிய காற்றழுத்த தாழ்வு..! 23 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய  மிக கன முதல் அதி கன மழை எச்சரிக்கை மக்களே உஷார்..! புதிய காற்றழுத்த தாழ்வு..! 23 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய  மிக கன முதல் அதி கன மழை எச்சரிக்கை

உத்தரப் பிரதேச மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த சக்திவாய்ந்த இடி, மின்னல் மற்றும் சூறாவளிக் காற்றுக்கு இதுவரை 89 பேர் உயிரிழந்துள்ளதாக மாநில அரசு உறுதிப்படுத்தியுள்ளது. பல மணி நேரம் இடைவிடாமல் வீசிய புயல் மற்றும் பலத்த காற்றினால் மாநிலத்தின் பல்வேறு பகுதிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

மின்னல்

இடி, மின்னல் மற்றும் சுவர் இடிந்து விழுந்த சம்பவங்களில் இதுவரை 89 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 53 பேர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மனித உயிரிழப்புகள் மட்டுமின்றி, சுமார் 114 கால்நடைகளும் இந்த இயற்கைச் சீற்றத்திற்குப் பலியாகியுள்ளன.

பல இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. மின்கம்பங்கள் விழுந்ததால் பல மாவட்டங்கள் இருளில் மூழ்கியுள்ளன. வீடுகள் மற்றும் பொதுச் சொத்துக்களுக்குப் பரவலான சேதம் ஏற்பட்டுள்ளது.

மகிழ்ச்சி!.. தமிழகத்தில் 23 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு

உயிரிழப்புகளுக்கு முதன்மைக் காரணமாக இடி, மின்னல் தாக்குதல்கள் மற்றும் பலத்த காற்றினால் வீடுகளின் சுவர்கள் இடிந்து விழுந்ததுமே அமைந்தன. மரங்கள் விழுந்ததில் சிக்கியும் பலர் உயிரிழந்துள்ளனர். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு மாநில அரசு சார்பில் நிவாரண உதவிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புக் குழுவினர் போர்க்கால அடிப்படையில் பணியாற்றி வருகின்றனர். காயமடைந்தவர்களுக்குத் தேவையான உயர்தர சிகிச்சைகளை வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.