சிங்கப்பெண் அதிரடிப்படை சாதனை - ஒரே வாரத்தில் 252 புகார்களுக்கு உடனடி நடவடிக்கை!

 
சிங்கப்பெண்

தமிழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காகச் செயல்பட்டு வரும் 'சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை' கடந்த ஒரு வாரத்தில் மட்டும் நூற்றுக்கணக்கான புகார்களின் மீது அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

கடந்த ஆகஸ்ட் 21 முதல் 27-ஆம் தேதி வரையிலான ஒரு வார காலத்தில், சிங்கப்பெண் சிறப்புப் படைக்கு வந்த 252 புகார்களின் மீது சம்பந்தப்பட்ட இடத்திற்கே நேரில் சென்று அதிரடிப்படை அதிகாரிகள் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கைகளை எடுத்துள்ளனர்.

சிங்கப்பெண் அதிரடிப்படை

இந்த வார கால நடவடிக்கையின் ஒரு பகுதியாக 15 புதிய குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், பல்வேறு காரணங்களால் காணாமல் போனதாகப் புகாரளிக்கப்பட்ட 3 பெண்கள் மற்றும் 7 குழந்தைகள் பத்திரமாக மீட்கப்பட்டு அவர்களின் குடும்பத்தினரிடம் பாதுகாப்பாக ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

சிங்கப்பெண்

சமூகத்தில் இன்னமும் தலைதூக்கி நிற்கும் தீமைகளில் ஒன்றான குழந்தைத் திருமணங்கள் குறித்துத் தகவல் பெறப்பட்டு, துரிதமாகச் செயல்பட்டு 7 குழந்தைத் திருமணங்கள் வெற்றிகரமாகத் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் இத்தகைய சிறப்புப் படைகளின் செயல்பாடுகள் பொதுமக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளன.