இரவு 10 மணிக்கு மேல் மது விற்பனை கூடாது - காவல் ஆணையர் கண்டிப்பு!

 
குடிமகன்கள் அதிர்ச்சி!  2 நாட்கள் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை!

சென்னையில் சட்டவிரோத மது விற்பனையைத் தடுப்பது தொடர்பாகத் டாஸ்மாக் பார் உரிமையாளர்கள் சுமார் 200 பேருடன் சென்னை மாநகரக் காவல் ஆணையர் அமல்ராஜ் ஆலோசனைக் கூட்டம் நடத்தினார்.

டாஸ்மாக்

அரசு அனுமதித்த நேரத்தைத் தாண்டி, குறிப்பாக இரவு 10 மணிக்கு மேல் பார்களிலோ அல்லது பார்களுக்கு வெளியே சட்டவிரோதமாகவோ மது விற்பனை செய்யக் கூடாது எனத் திட்டவட்டமாக அறிவுறுத்தப்பட்டுள்ளது. விதியை மீறி சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டால், பார் உரிமையாளர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டது.

டாஸ்மாக்

பார் உரிமையாளர்கள் காவல்துறையினருக்கோ அல்லது மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலிஸாருக்கோ எக்காரணம் கொண்டும் லஞ்சம் கொடுக்கக் கூடாது எனக் கேட்டுக்கொள்ளப்பட்டனர். காவல் துறையினர் யாரேனும் லஞ்சம் கேட்டால், உடனடியாக 78717-23000 என்ற பிரத்யேகச் தொலைபேசி எண்ணிற்குத் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் எனச் சென்னை காவல் ஆணையர் தெரிவித்துள்ளார்.