அரசுப் பள்ளியில் காலை உணவில் பல்லி: செங்கல்பட்டு அருகே 11 மாணவ, மாணவிகள் மருத்துவமனையில் அனுமதி!

 
அரசுப் பள்ளி காலை உணவில் பல்லி

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே அரசுப் பள்ளியில் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட காலை உணவில் பல்லி இறந்து கிடந்த விபத்து அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள மேலக்கண்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பயின்று வரும் மாணவ-மாணவிகளுக்கு வழக்கம் போல் காலை உணவு வழங்கப்பட்டு வருகிறது.

மருத்துவமனை வாந்தி மயக்கம் மாணவர்கள்

இன்று காலை மாணவர்களுக்கு வழங்கப்பட்ட சாம்பார் சாதம் மற்றும் உப்புமாவைச் சாப்பிட்ட போது, அதில் இறந்த நிலையில் பல்லி கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, அந்த உணவைச் சாப்பிட்ட 11 மாணவர்களுக்குத் திடீரென மயக்கம் மற்றும் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.

9 மாணவிகள் மற்றும் 2 மாணவர்கள் என மொத்தம் 11 பேரும் உடனடியாக மீட்கப்பட்டு அருகில் உள்ள பாலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்குத் தீவிர மருத்துவச் சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருவதுடன், உடல்நிலையும் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

மருத்துவமனை ஆம்புலன்ஸ் போலீஸ் கொலை கத்திக்குத்து

இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த செங்கல்பட்டு தாலுகா காவல்துறையினர் பள்ளிக்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர். மாணவர்களுக்கு வழங்கப்பட்ட உணவில் பல்லி எவ்வாறு விழுந்தது மற்றும் உணவு தயாரிக்கப்பட்ட தூய்மை முறை குறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது.