மூத்த பாஜக தலைவர் எல்.கே. அத்வானி மருத்துவமனையில் அனுமதி! உடல்நிலை எப்படி?
பாஜக மூத்த தலைவரும், முன்னாள் துணைப் பிரதமருமான எல்.கே. அத்வானி (98), நெஞ்சுத் தொற்று காரணமாக டெல்லியில் உள்ள இந்திரபிரஸ்தா அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அக்டோபர் 16-ம் தேதி இரவு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட அவர், நுரையீரல் சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ளார். அவருக்குத் தேவையான மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மருத்துவமனைத் தரப்பினரின் தகவலின்படி, அத்வானியின் உடல்நிலை சீராக உள்ளது. வயது தொடர்பான உடல்நலப் பிரச்சினைகளுக்காக அவர் கடந்த மே மாதமும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.
முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் தலைமையிலான ஆட்சியில், 2002 முதல் 2004 வரை நாட்டின் துணைப் பிரதமராக அத்வானி பதவி வகித்தார். அவரது அரசியல் பங்களிப்பைப் பாராட்டி 2024-ம் ஆண்டு அவருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.
