திருச்சி, கரூர் மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு!

 
சமயபுரம் மாரியம்மன் கோவில் சித்திரை தேர்த்திருவிழா சமயபுரம் மாரியம்மன் கோவில் சித்திரை தேர்த்திருவிழா

திருச்சி மற்றும் கரூர் மாவட்டங்களில் நடைபெற உள்ள கோயில் திருவிழாக்களை முன்னிட்டு, அந்தந்த மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, திருச்சி மாவட்டத்தில் உள்ள சமயபுரம் மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு மே 14-ஆம் தேதியும், கரூர் மாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு மே 27-ஆம் தேதியும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறை நாட்களில் அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் செயல்படாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூர் விடுமுறை

பக்தர்கள் எவ்வித சிரமமுமின்றித் திருவிழாவில் பங்கேற்றுச் சாமி தரிசனம் செய்யும் வகையில் இந்த விடுமுறை அறிவிப்பு வெளியாகியுள்ளது. இருப்பினும், அவசர காலப் பணிகளைக் கவனிக்கும் அரசு அலுவலகங்கள் மற்றும் கருவூலங்கள் மட்டும் குறைந்தபட்சப் பணியாளர்களுடன் வழக்கம் போலச் செயல்படும். இந்த உள்ளூர் விடுமுறையானது திருச்சி மற்றும் கரூர் மாவட்ட எல்லைகளுக்கு உட்பட்ட பகுதிகளுக்கு மட்டுமே பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

கரூர் மாரியம்மன்

இந்த இரண்டு மாவட்டங்களிலும் அறிவிக்கப்பட்டுள்ள உள்ளூர் விடுமுறையை ஈடுசெய்யும் வகையில், மே மாதத்தில் ஒரு சனிக்கிழமை வேலை நாளாக அறிவிக்கப்பட உள்ளது. இதற்கான தேதியை மாவட்ட நிர்வாகம் பின்னர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும். மற்ற மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் எவ்வித மாற்றமுமின்றி வழக்கம் போல் செயல்படும் எனத் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.