கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்... டிசம்பர் 24ம் தேதி உள்ளூர் விடுமுறை... கலெக்டர் அறிவிப்பு!

 
உள்ளூர் விடுமுறை
 

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, கிறிஸ்துமஸுக்கு முதல் நாளான டிசம்பர் 24ம் தேதி செவ்வாய் கிழமையன்று உள்ளூர் விடுமுறை அறிவித்து அம்மாவட்ட் ஆட்சியர் அழகுமீனா உத்தரவிட்டுள்ளார். 

இது தொடர்பாக ஆட்சியர் அழகுமீனா வெளியிட்ட அறிவிப்பில், "கன்னியாகுமரி மாவட்டத்திற்கு கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முதல் நாள் 24.12.2024 (செவ்வாய் கிழமை) அன்று கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை வழங்கி உத்தரவிடப்படுகிறது.

விடுமுறை

(2)  24.12.2024 அன்று அறிவிக்கப்பட உள்ள உள்ளூர் விடுமுறைக்கு ஈடாக 2024 டிசம்பர் திங்கள் நான்காவது சனிக்கிழமை (28.12.2024) அன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கும் வேலை நாளாக அறிவிக்கப்படுகிறது.

விடுமுறை பள்ளி

(3)  கன்னியாகுமரி மாவட்டத்திற்கு கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முதல் நாள் உள்ளூர் விடுமுறை செலவாணி முறிச் சட்டம் 1881 (Under Negotiable Instruments Act 1881) -இன் படி அறிவிக்கப்படவில்லை என்பதால் 03.12.2024 அன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் தலைமைக் கருவூலம் மற்றும் கிளைக் கருவூலங்கள் அரசு ஈடுபாடு சம்பந்தப்பட்ட அவசரப் பணிகளைக் கவனிக்கும் பொருட்டு, தேவையான பணியாளர்களைக் கொண்டு இயங்கும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!