‘லாக்கப் டெத்’... கணவரின் மரணத்துக்கு நீதி வேண்டும் - கதறும் மனைவி லதா!

 
லாக்கப்

மதுரை மாவட்டம் செக்கானூரணி காவல் நிலையத்தில் ஓட்டுநர் பாலகிருஷ்ணன் மர்மமான நிலையில் உயிரிழந்த நிலையில், பிரேத பரிசோதனை அறிக்கைக்காக காத்திருக்கிறார்கள். உறவினர்களிடம் கூட பாலகிருஷ்ணனின் சடலத்தைக் காட்டாமல் அவசர அவசரமாக பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தது சர்ச்சைக்குள்ளாகி, கேள்வி எழும்பியுள்ளது.

தமிழகம் முழுவதும் காவல்நிலைய மரணங்கள் தொடர்கதையாகி வரும் நிலையில், பாலகிருஷ்ணனின் மரணத்தில் உரிய விசாரணை நடத்தி நீதி வழங்க வேண்டும் என அவரது மனைவி சுதா கோரிக்கை விடுத்துள்ளார்.

ஆம்புலன்ஸ்

இது குறித்து கண்ணீர் மல்க பேசிய அவர், “எனது கணவர் தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு கோழையல்ல. எங்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும். எதற்காக எனது கணவரை காவல் நிலையத்தில் வைத்திருந்தீர்கள்? அவர் எதற்காக அங்கு இருக்க வைக்கப்பட்டார்? இதற்கு உரிய பதில் அளிக்க வேண்டும். எனது கணவரின் மரணத்திற்கு நீதி கிடைக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

மதுரை செக்கானூரணி காவல் நிலையம் லாக்-அப் டெத்

பாலகிருஷ்ணனின் மரணம் தொடர்பாக பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ள அவரது மனைவி, சம்பவத்தின் பின்னணி குறித்து உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.