இன்று மக்களவை தேர்தல் அட்டவணை வெளியாக வாய்ப்பு!

 
தேர்தல்

2024 ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கான ஆயத்த பணிகளில் தேர்தல் கட்சிகள் மும்மூரமாக செயல்படுத்தி வருகின்றன. கூட்டணி, தொகுதிப்பங்கீடு, பிரச்சார வியூகம், தேர்தல் வாக்குறுதி என இரவு பகலாக பணியாற்றி வருகின்றன. எதிர்பாராத திடீர் அரசியல் நிகழ்வுகளால் செய்தி மற்றும் பத்திரிக்கைக்கு தகவல்கள் கொட்டப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தேர்தல் அட்டவணை இன்று வெளியாகலாம் என அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

தேர்தல்

தேர்தலுக்கான அட்டவணையை இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் இன்று மார்ச் 15 வெள்ளிக்கிழமை  அறிவிக்க வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் மாநில வாரியான கள ஆய்வை தலைமைத் தேர்தல் ஆணையம் மேற்கொண்டு முடித்துள்ளது. இதனையடுத்து சமீபத்தில்   ஜம்மு - காஷ்மீர் பாதுகாப்பு நிலவரம் மற்றும் தேர்தல் பணிக்கு தேவையான துணை ராணுவப் படைகள் குறித்து மத்திய அரசின் உயர் அதிகாரிகளுடன் தேர்தல் ஆணைய அதிகாரிகள் குழு ஆலோசனை நடத்தியதும் குறிப்பிடத்தக்கது.  

கர்நாடகா தேர்தல் வாக்குப்பதிவு பெண்கள் முதல் வாக்காளர்கள் ஓட்டுப்பதிவு

ஜம்மு - காஷ்மீர் சென்ற தேர்தல் குழு  மக்களவைத் தேர்தலுடன் ஜம்மு - காஷ்மீர் யூனியன் பிரதேசத்துக்கும் தேர்தல் நடத்தலாமா என்பது குறித்து கள ஆய்வுகளை நடத்தி முடித்துள்ளது.  இன்று  பார்லிமெண்ட் எலெக்‌ஷன் ஷெட்யூல்  ரிலீசாகலாம் என நம்பப்படுகிறது. இதனைப் பொறுத்தே மாணவர்களின் தேர்வு முடிவுகள், கல்லூரி மாணவர்களின் செமஸ்டர் தேதிகள் , போட்டி தேர்வுகளுக்கான தேதிகள் நிர்ணயிக்கப்பட உள்ளன.  பொதுமக்களும் தேர்தல் தேதிகளை பொறுத்து தங்கள் சுற்றுலா, சொந்த ஊர் பயணத்தை திட்டமிடக் காத்துக் கிடக்கின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

From around the web