‘பழித்தாரும் வாழ்க.. பகைத்தாரும் வாழ்க..’ வைரலாகும் வைரமுத்துவின் பதிவு!

 
வைரமுத்து

இசையா, மொழியா என விவாதம் நடந்து கொண்டிருக்கும் இந்த நேரத்தில் நான் காலம் போன்று கடந்து செல்வேன் என கவிப்பேரரசு வைரமுத்து வெளியிட்டுள்ள பதிவு மீண்டும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. 

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் ‘கூலி’ படத்தின் டைட்டில் டீசர் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பு பெற்று வருகிறது. அந்த டீசரில் இளையராஜா இசையில் ரஜினிகாந்த் நடித்த ‘தங்க மகன்’ படத்தில் இடம்பெற்ற ‘வா வா பக்கம் வா’ என்ற பாடல் மறு உருவாக்கம் செய்யப்பட்டிருந்தது. இந்த படத்தில் தன்னுடைய இசையை அனுமதி இன்றி பயன்படுத்தியதாக சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு விளக்கம் கேட்டு இளையராஜா நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார். இந்த விவகாரம் நெட்டிசன்கள் மத்தியில் அதிகம் விவாதிக்கபட்டு வருகிறது.

இந்த நிலையில், பட விழாவில் கலந்து கொண்ட கவிப்பேரரசு வைரமுத்து மொழி பெரிதா, இசை பெரிதா என்பது குறித்து பேசினார். சில நேரங்களில் இசையை விட மொழி பெரியதாக இருக்கிறது. சில சமயங்களில் மொழியை விட இசை பெரியதாக உள்ளது. இதை புரிந்து கொள்பவன் ஞானி, புரிந்து கொள்ளாதவன் அஞ்ஞானி என்று வைரமுத்து பேசினார்.

 

சிற்றெறும்புக்கும் சிறுவயிறுண்டு! சற்றே உதவுங்கள்! கவிஞர் வைரமுத்து!

 

அதை பார்த்த கங்கை அமரனோ வைரமுத்துவை எச்சரித்து வீடியோ வெளியிட்டார். இனியும் இளையராஜா அண்ணனை சீண்டினால் விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும் என கங்கை அமரன் எச்சரித்தார். இதை பார்த்தவர்கள் இசை பெரிதா, மொழி பெரிதா என சமூக வலைதளங்களில் விவாதிக்கத் துவங்கிவிட்டார்கள். அந்த விவாதம் இன்னும் ஓய்ந்த பாடில்லை. இந்த விவாதத்தின்போது வைரமுத்து ஆதரவாக சிலரும், இசைஞானி இளையராஜாவுக்கு ஆதரவாக சிலரும் பேசியிருக்கிறார்கள்.

இந்நிலையில் வைரமுத்து இன்று காலை போட்டிருக்கும் ட்வீட் இசை, மொழி விவாதத்தில் இருப்பவர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது. இது தொடர்பாக இளையராஜாவுக்கும் கங்கை அமரனுக்கும் தக் லைஃப் கொடுக்கும் விதமாக ட்வீட் போட்டுள்ளார்.
 



அதில், “பழித்தாரும் வாழ்க; என்னைப் பகைத்தாரும் வாழ்க; மன்றில் இழித்தாரும் வாழ்க; வாழ்வில் இல்லாத பொய்மை கூட்டிச் சுழித்தாரும் வாழ்க; என்னைச் சுற்றிய வெற்றி வாய்ப்பைக் கழித்தாரும் வாழ்க; நானோ காலம்போல் கடந்து செல்வேன்..” என குறிப்பிட்டுள்ளார். வைரமுத்துவின் இந்த பதிவு ரசிகர்கள் மத்தியில் மீண்டும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. 

From around the web