“வருங்கால துணை முதல்வர் வாழ்க!” - திருச்சியில் தவெக தொண்டர்கள் உற்சாகக் கோஷம்!
தவெக பொதுச்செயலாளர் என். ஆனந்திற்குத் திருச்சி விமான நிலையத்தில் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
திருச்சி சென்ற தவெக பொதுச்செயலாளர் என். ஆனந்திற்கு விமான நிலையத்தில் திரண்டிருந்த கட்சித் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் பூங்கொத்துகள் கொடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர். வரவேற்பின் போது தொண்டர்கள் சிலர் அவரை நோக்கி "நிரந்தர பொதுச்செயலாளர் வாழ்க!" என்றும், "வருங்கால துணை முதலமைச்சர் வாழ்க!" என்றும் உரத்த குரலில் முழக்கங்களை எழுப்பினர்.

தொண்டர்களின் திடீர் கோஷங்களைக் கேட்ட பொதுச்செயலாளர் என். ஆனந்த், புன்னகைத்தவாறே கைகளை அசைத்து 'உஷ்... உஷ்...' என சைகை செய்து தொண்டர்களைச் சாந்தப்படுத்தினார். தவெக பொதுச்செயலாளருக்குத் தொண்டர்கள் "துணை முதல்வர்" எனச் முழக்கமிட்ட இச்சம்பவம் திருச்சி அரசியலிலும் சமூக வலைதளங்களிலும் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.
