மார்ச்சில் 9 நாட்கள் நீ....ண்ட விடுமுறை... இப்பவே திட்டமிட்டுக்கோங்க!

 
விடுமுறை

மார்ச் மாதம் முடிவடைய இன்னும் சில நாட்களே உள்ளன. இந்நிலையில் அடுத்தடுத்து மார்ச்சிலேயே 9 நாட்கள் விடுமுறை என்பதை பலரும் கவனிக்க மறந்துவிட்டோம். அதற்கேற்றாற் போல் இந்த நாட்களை குடும்பத்துடன் களிக்க திட்டமிட்டுக் கொள்ளலாம். பள்ளி , அலுவலகங்களும் விடுமுறை நாட்கள் என்பது தான் ஆச்சர்ய தகவல்.   மார்ச் மாதத்தில், ஹோலி முதல் புனித வெள்ளி வரை நீண்ட வார இறுதி. அத்துடன்   அலுவலகத்தில்  3 நாட்கள் மட்டும் விடுப்பு எடுத்தாலே போதும்  .

விடுமுறை

தொடர்ந்து  9 நாட்கள் லீவு பெறலாம். ஹோலி மார்ச் 25 திங்கட்கிழமை மற்றும் புனித வெள்ளி மார்ச் 29 வெள்ளிக்கிழமை.நடுவில்   செவ்வாய் , புதன், வியாழன்   3 நாட்கள் அலுவலகத்திற்கு விடுப்பு எடுத்தால்,  தொடர்ச்சியான 2 நீண்ட வார இறுதி நாட்களைப் பெறலாம்.  ஹோலிக்கு முந்தைய வார இறுதி   விடுமுறையையும், வார இறுதியில் புனித வெள்ளி வரை அதாவது மார்ச் 23 முதல் மார்ச் 31 வரையிலும்   விடுமுறையை அனுபவித்துக் கொள்ளலாம்.

நவம்பர் 1ம் தேதி  விடுமுறை! கலெக்டர் அதிரடி!

இதற்கு மார்ச் 26,27,28 தேதிகளில்  அலுவலகத்திற்கு 3  நாட்கள் விடுப்பு எடுத்தால் போதும். தேர்வுகள் முடிந்திருப்பதால் வீட்டில் பிள்ளைகள், பெரியவர்கள் என குடும்ப பயணங்களுக்கு ஏற்ற மாதம் இதுவாக இருக்கும். ஏப்ரல் மாதம் தேர்தல். மே மாதம் கோடை விடுமுறை. சுற்றுலா ஸ்தலங்கள் அனைத்திலும் கூட்டம் நிரம்பி வழியும். அதனால் இந்த 2 வார இறுதி நாட்களை திட்டமிட்டுக்கோங்க. 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web