FRAME பாருங்க ஜி... இந்த பக்கம் ஸ்டாலின்... அந்த பக்கம் ரஜினிகாந்த்... நடுவே ஸ்டைலாக நடந்து வரும் மாப்பிள்ளை அனிருத்!
இந்தியத் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தருக்கும், சன் நெட்வொர்க் குழுமத் தலைவர் கலாநிதி மாறனின் மகளும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஐபிஎல் அணியின் உரிமையாளருமான காவ்யா மாறனுக்கும் கிரீஸ் நாட்டில் மிகவும் பிரம்மாண்டமான முறையில் திருமணம் நடைபெற்றது. தமிழ்நாட்டைச் சேர்ந்த இரு குடும்பத்தினரும் தங்களது கனவுத் திருமணத்தை கிரீஸ் நாட்டில் பல கோடி ரூபாய் செலவில் கோலாகலமாக நடத்தியுள்ளனர்.
திருமண விழாவில் ஒருபுறம் திமுக தலைவர் ஸ்டாலினும், மறுபுறம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும் அமர்ந்திருக்க, அவர்களுக்கு நடுநாயகமாக மாப்பிள்ளை அனிருத் மகிழ்ச்சியுடன் நடந்து வரும் புகைப்படம் வெளியாகி சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாகப் பரவி வருகிறது.

முன்னணி நடிகர்களின் படங்களுக்குத் தனது இசையால் 'மாஸ்' சேர்த்த அனிருத், நிஜ வாழ்க்கையில் அரசியல் மற்றும் சினிமா ஆளுமைகளுக்கு இடையே நடந்து வரும் இந்தக் காட்சி "பிஜிஎம் இல்லாமலேயே தெறிக்கிறது; ஃபிரேமைப் பாருங்க ஜி" என ரசிகர்கள் உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர். 36 வயதான அனிருத் மற்றும் 34 வயதான காவ்யா மாறன் ஆகியோரது திருமணம் நெருங்கிய உறவினர்கள் மற்றும் முக்கிய விருந்தினர்கள் முன்னிலையில் இனிதே நிறைவடைந்துள்ளது.
திருமண விழாவில் மணமக்கள் கைகோர்த்து நடந்து வரும் புகைப்படங்களும், முக்கியப் பிரமுகர்கள் ஒரே மேடையில் மணமக்களை வாழ்த்தும் காட்சிகளும் ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்துள்ளன.

இதனைத் தொடர்ந்து, வரும் நவம்பர் 21-ம் தேதி சென்னையில் மிகப் பிரம்மாண்டமான திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு இரு வீட்டாரும் ஏற்பாடு செய்துள்ளனர். இதில் பிரதமர் நரேந்திர மோடி, தமிழக முதலமைச்சர் விஜய் உள்ளிட்ட முக்கிய அரசியல் தலைவர்களும், இந்தியத் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களும் பங்கேற்க அழைப்பிதழ் வழங்கப்பட்டுள்ளது.
