கூகுள் மேப் பார்த்ததால் விபரீதம்... ஆற்றில் சொகுசு கார் பாய்ந்து 2 பேர் உயிரிழப்பு!
விபத்து நிகழ்ந்த தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், அந்த பகுதியில் இருந்து பொதுமக்களின் உதவியுடன் இருவரின் சடலங்களையும், காரையும் மீட்டனர்.
இந்த விபத்தில் கேரள மாநிலம் கொட்டாரக்கரையைச் சேர்ந்த ஜேம்ஸ் ஜார்ஜ் (48), மகாராஷ்டிராவைச் சேர்ந்த சைலி ராஜேந்திர சர்ஜே (27) ஆகியோர் உயிரிழந்தது போலீசாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
விபத்து குறித்து அறிந்ததும், அந்த பகுதியில் இருந்த பொதுமக்கள் ஆற்றினுள் இறங்கி, காரின் கண்ணாடியை உடைத்து 2 பேரையும் மீட்டனர். உடனடியாக அவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
கூகுள் மேப்ஸைப் பார்த்துக் கொண்டே கார் ஓட்டிச் சென்றதால் விபத்து நடந்துள்ளது என்று போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
கேரள மாநிலம், எர்ணாகுளத்தில் இருந்து கார் வாடகைக்கு எடுக்கப்பட்டுள்ளது. இந்த விபத்து நேற்று இரவு 8.45 மணியளவில் நடந்துள்ளது. குமரகம் பக்கத்தில் சென்றுக் கொண்டிருந்த போது கார் ஆற்றில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. பாலத்தின் மீது ஏறுவதற்கு பதிலாக தண்ணீரில் கார் விழுந்துள்ளது.
கைப்புழாமுட் பாலத்தின் இடதுபுறம் உள்ள சர்வீஸ் சாலை வழியாக கார் சென்றுக் கொண்டிருந்த போது கோட்டயம் பகுதியில் இருந்து வந்த கார் சாலையில் மோதியதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். காருக்குள் இருந்தவர்களின் அலறல் சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் ஓடி சென்றுப் பார்த்தபோது கார் முழுவதுமாக தண்ணீரில் மூழ்கிக் கொண்டிருந்தது.
உயிரிழந்தவர்களின் சடலங்களை கோட்டயம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விட்டு, வழக்குப்பதிவு செய்து போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
புரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிடக்கூடாது ... விஞ்ஞான விளக்கம்!