அசத்தல்... QR கோடு உதவியுடன் காணாமல் போன மாற்றுத்திறனாளி சிறுவன் கண்டுபிடிப்பு!

 
மாற்றுத்திறனாளி சிறுவன்

விஞ்ஞானத்தின் வளர்ச்சி ஆக்கப்பூர்வமான முறையில் பல விஷயங்களில் பயன்படுத்தப்படுகிறது. காணாமல் போன மாற்றுத்திறனாளி மாணவர் ஒருவர் க்யூ ஆர் கோடு உதவியுடன் மீட்கப்பட்டுள்ளார். மும்பை வோர்லியில் 12 வயது மாற்றுத்திறனாளி குழந்தை தனது நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது குழந்தை காணாமல் போனதாக கூறப்படுகிறது. எங்கு தேடியும் கிடைக்கவில்லை, சுமார் 6 மணி நேரமாக போன் அடித்து பார்த்துள்ளனர். உங்கள் குழந்தை எங்களுடன் உள்ளது என போலீஸ் அதிகாரி கூறியதையடுத்து, பெற்றோர் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

குழந்தையின் பெற்றோரின் தொலைபேசி எண்கள் எவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டன என்பது சுவாரஸ்யமானது. ஒரு காவலர் மாற்றுத்திறனாளி குழந்தையை பார்த்தார். குழந்தையின் கழுத்தில் ஒரு லாக்கெட் இருப்பதைக் கவனித்தார். அதில் QR குறியீடு இருந்தது. QR குறியீட்டை ஸ்கேன் செய்த பிறகு, பெற்றோரின் தொலைபேசி எண்களை காட்டியது.

அந்த எண்ணுக்கு போன் செய்த போலீசார் விவரம் பெற்று குழந்தையை பெற்றோரிடம் ஒப்படைத்தனர். க்யூஆர் கோட் மூலம் சிறப்புக் குழந்தையை குடும்பத்துடன் சேர்த்து வைத்து சம்பவம் அப்பகுதி மக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web