“விநாயகருக்கு இரண்டு மகன்கள்..” - புராணக் குறிப்பும் ஆன்மிக நம்பிக்கைகளும்!

 
விநாயகர்

தென்னிந்தியாவில் விநாயகர் பெரும்பாலும் பிரம்மச்சாரியாகவே வழிபடப்பட்டு வரும் நிலையில், வட இந்தியாவில் அவர் குடும்பத்துடன் இல்லறக் கடவுளாகப் போற்றப்படும் வழக்கம் காலங்காலமாக நடைமுறையில் உள்ளது.

கணேச புராணத்தின்படி, விநாயகருக்கு ரித்தி மற்றும் சித்தி என்ற இரு மனைவிகள் உள்ளனர். நம்மூரில் இவர்களை சித்தி, புத்தி என்கிறோம். இவர்களுக்கு சுபீட்சம் மற்றும் லாபத்தை அருளும் வகையில் இரண்டு மகன்கள் இருப்பதாக நம்பப்படுகிறது.

விநாயகர்

ரித்தியின் மகனாகச் சுபீட்சத்தின் கடவுளாகப் போற்றப்படும் 'ஷேமா'  அல்லது ஷேத்ரா என்பவரும், சித்தியின் மகனாக லாபத்தின் கடவுளான 'லாபா' என்பவரும் வட மாநில ஆன்மீக வழிபாடுகளில் சிறப்பிடம் பெற்றுள்ளனர்.

தமிழகம் உள்ளிட்ட தென்னிந்தியப் பாரம்பரியத்திற்கு இது சில முரண்பாடாகத் தோன்றினாலும், வட மாநிலங்களில் தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகளின் போது விநாயகருடன் அவரது குடும்பத்தினரையும் சேர்த்து வழிபடும் வழக்கம் பரவலாகக் காணப்படுகிறது.