லாரி மோதி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் பலி... பெரும் சோகம்!

 
accident

 

மத்தியப் பிரதேச மாநிலம் தார் மாவட்டத்தில் இன்று பயங்கர சாலை விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளது. அதிவேகமாக வந்த லாரி ஒன்று கட்டுப்பாட்டை இழந்து கார் மீது மோதியதில் காரில் பயணித்த 6 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்து குறித்த தகவல் அறிந்ததும் காவல்துறையினர் மற்றும் மீட்புப் படையினர் உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர்.

மருத்துவமனை ஆம்புலன்ஸ் போலீஸ் கொலை கத்திக்குத்து

இந்த கோர விபத்தில் பலியானவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு உடற்கூறாய்வுக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. விபத்துக்கான உண்மையான காரணம் என்ன என்பது குறித்துக் காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளதுடன், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்குப் பலரும் தங்களின் இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.