சாலையில் தொழுகை செய்த லாரி ஓட்டுநர்... அடுத்து நடந்த விபரீதம்!
எகிப்தின் பெனி சூப் மாகாணத்தில் சாலையில் தொழுகை செய்து கொண்டிருந்த லாரி ஓட்டுநர் ஒருவரை இருவர் தாக்கிய காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவிய நிலையில், தொடர்புடைய இரண்டு நபர்களைப் பாதுகாப்புப் படையினர் கைது செய்துள்ளனர்.
பெனி சூப் மாகாணத்தின் நுழைவாயிலாகவும், நைல் நதியின் கிழக்கு மற்றும் மேற்குக் கரைகளை இணைக்கும் முக்கியப் போக்குவரத்து மையமாகவும் திகழும் அட்லி மன்சூர் பகுதியில் உள்ள பரபரப்பான சினியா சாலையில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.
அப்பகுதியில் உள்ள சாலையில் லாரி ஓட்டுநர் ஒருவர் தொழுகை நடத்திக் கொண்டிருந்தபோது, இருவர் அவரைத் தாக்கும் காட்சிகள் கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்தன.
இணையத்தில் வேகமாகப் பரவிய இந்தக் காணொளியின் அடிப்படையில், பெனி சூப் பாதுகாப்பு இயக்குநரகத்தின் பாதுகாப்புப் படையினர் உடனடியாகச் செயல்பட்டுத் தாக்குதலில் ஈடுபட்ட இரண்டு நபர்களையும் கைது செய்தனர்.
இந்த தாக்குதலுக்கான உண்மையான காரணங்கள் மற்றும் சம்பவத்தின் பின்னணிச் சூழல்கள் குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணைக்குப் பிறகு குற்றவாளிகள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
